விதியை இறுக்கமாக்கும் விலக்குகள்
பள்ளிக் கல்வி தொடர்பாக முகநூலில் பதிவுகள் இட்டார் என்பதாலும் கட்டுரைகள் எழுதினார் என்பதாலும் அரசுப் பள்ளி ஆசிரியர் உமா மகேசுவரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசுப் பள்ளியில் அவர் பணிபுரிவதால் பள்ளிக் கல்வித்துறைத் திட்டங்கள், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள், ஆசிரியர்களின் பிரச்சினைகள், மாணவர்களின் தேவைகள் உள்ளிட்ட பலவற்றை நன்றாக அறிந்திருக்கிறார். அவற்றை வெளிப்படுத்தும் விதத்தில் கட்டுரைகளும் எழுதுகிறார். கல்விப் பிரச்சினைகள்சார்ந்து அவர் எழுதிய கட்டுரைகள் நூல்களாகவும் வெளியாகி ஆசிரியர்களிடத்தும் பொதுவெளியிலும் நல்ல கவனம் பெற்றிருக்கின்றன. இவ்வாறு கல்விப் பிரச்சினைகள்பற்றி எழுதுவோர் மிகவும் குறைவு. மாணவர்கள்மீதான அக்கறையோடும் கல்வி குறித்த சுயபார்வையோடும் ஓர் ஆசிரியரே எழுதுவது முக்கியமானது.
ஆனால் அரசு அப்படிப் பார்க்கவில்லை. உமா மகேசுவரி எழுதுவது அரசு ஊழியர்களின் உணர்ச்சியைத் தூண்டிப் பொதுமக்களின் அமைதிக்குக் குந்தகம் விளைப்பதாக உள்ளது எனவும் தமிழ்நாடு அரசு ஊழியர் விதிகளுக்கு எதிரான செயல்பாடு என்றும் கூறிப் பணியிடை நீக்கம் செய்துள்ளது. இதில் பள்ள