‘சங்கீத கலாநிதி’ டி.எம். கிருஷ்ணா: வாழ்வின் திசையை மாற்றும் கலை
படஉதவி: டி.எம். கிருஷ்ணா முகநூல்
டி. எம். கிருஷ்ணாவின் இசையை அவ்வப்போது கேட்பதுண்டு என்றாலும் அவரிடம் பேச வேண்டும், சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதில்லை. அந்த எண்ணத்தை ஏற்படுத்தியது அவருடைய எழுத்து. கிட்டத்தட்டப் பத்தாண்டுகளுக்கு முன்பு தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் ஞாயிற்றுக்கிழமை இணைப்புப் பகுதியில் அவர் எழுதியிருந்த கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. பயிற்சியை அடிப்படையாகக் கொண்ட நிகழ்த்து கலை எப்போது, எப்படி தன்னெழுச்சி மிகுந்த கலை வெளிப்பாடாக மாறுகிறது என்பதை சச்சின் டெண்டுல்கரின் ஒரு ஷாட்டை முன்வைத்து விளக்கியிருந்தார். அதைப் படித்தபோது ஏற்பட்ட பரவசம் அவருடைய தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்துப் பேசத் தூண்டியது. அவரைப் பாராட்டுவதாகத் தொடங்கிய அந்த உரையாடல் கலை வெளிப்பாடுகள் குறித்த சிந்தனைகளைத் தொட்டு நீண்டது.
க