ஓரெழுத்துக் காதல் கடிதம்
ஓரெழுத்துக் காதல் கடிதம்
உன்னோடு பேசத் தோன்றும்போதெல்லாம்
அண்ணாந்து பார்த்துக்கொள்வேன்
வானத்தைப் பெரும் நீளமான வரைபடமாய்,
அதில் எழுதத் துவங்கிய வாக்கியமொன்றை
முடிக்கத் தெரியாத வானூர்தியாய்
வழியெங்கும் மூச்சடைக்க உளறிச் செல்வேன்
எல்லை நீண்ட புகைத்தடமாய்
உன்னைப் பற்றி எழுதும்போதும்
அண்ணாந்து பார்த்துக்கொள்வேன்
அப்போது கூட்டமாய்ப் பறந்து செல்லும்
சில வான் அசைப்பிகள்
உன் பெயரின் முதலெழுத்தை
அசையாமல் அந்தரத்தில் நிலைநிறுத்தும்
அது பின்பு தானாகவே கலைந்து ஒவ்வொன்றாக மாறி
எனது பெயரின் முதல் எழுத்தாக வந்து முடியும்
எங்கோ தொலைதூரத்தில்
ஆனாலும் தெள்ளத் தெளிவாக.
பிரமிப்பின் ஒப்பனை
எவ்வளவு பெரிய விசயத்தைச் சொல்லியிருக்கிறேன்
இவ்வளவுதானா உனது எதிர்வி