சிறிய வீடு
1. சிறிய வீடு
என் கைக்குள்ளே ஒரு மின்மினி இருக்கும்போது விளக்கு ஒளிரும் ஒரு சிறிய வீடு என்னிடம் இருக்கிறது. இருட்டில் வருகிற எல்லோரையும் இவ்வீட்டிற்கு வரவேற்கிறேன். விரைவாக வாருங்கள். விளக்கு இல்லாமல் போனால் வீடே இல்லாமல் போய்விடும்.
2. சூரியன் ஒரு மச்சம்
மனிதர்களின் புன்னகையின் கீழே எல்லாமே வடிவம் பெறத் தொடங்குகின்றன. நீண்ட நேரம் வடிவம் காட்டாதிருந்த சூரியன் மாலையில் சாயும்போது எல்லோருக்கும் தெரிவதைப் பாருங்கள்.
அது -
இரவில் ஒரு மச்சமாக மாறிவிடுகிறது.
கதாபாத்திரத்திற்குத் தேவைப்படுகிற சோகத்திற்கு ஆளாகும்போது தனது சோகங்களையும் சேர்த்து வெளிப்படுத்துகிற நடிகையின் உதட்டுக்குக் கீழே மச்சமாகி அது மீண்டும் உதிக்கிறது.
அவளின் உதடுகள்
தாவரங்களுக்குத் தலை சீவி விட மழையே வா என்று பாடுகின்றன. ஒரு பழங்காலப் பாணர் குழு பாதை வளைவுகளிலிருந்து ஏறி அக் குரலுடன் இணைகிறது.
சூரியனை வானத்திற்கு உயர்த்தியபடி
அருவியும் ஓடையும் அதே பாதையில