அறிவைப் பற்றி நின்ற கலைஞன்
“இராசேந்திர சோழனின் மிகச் சிறந்த கதைகளில் பெரும்பாலானவை அவர் எழுதத் தொடங்கிய எழுபதுகளின் தொடக்கத்திலேயே வெளிவந்துவிட்டன. இடதுசாரியாகக் களச் செயwல்பாடுகளில் தீவிரமாக இயங்கத் தொடங்கிவிட்டதால் அதன் பிறகான காலங்களில் அவர் எழுதியவை குறைவு. அவற்றிலும் பெரும்பாலானவை அரசியல் பகடிக் கதைகள்.”
இராசேந்திர சோழன் குறித்துத் தமிழ்ச்சூழலில் பொதுவாக நிலவும் கருத்து ஏறத்தாழ இதுதான். இக்கருத்தினை முன்வைத்த பிறகு இராசேந்திர சோழனின் படைப்புகள் பற்றிப் பேசுவது ரொம்பவும் எளிமையாகிவிடுகிறது. ‘புற்றிலுறையும் பாம்புகள்’, ‘சிறகுகள் முளைத்து’ எனப் பாலுறவின் பரிமாணங்களை உக்கிரமாக வெளிப்படுத்தும் கதையொன்றை எடுத்து வசதியாகப் பேசிவிட முடிகிறது. அங்கிருந்து தொடங்கி இரா.சோ.வின் படைப்புலகை எவ்வளவு வேண்டுமானாலும் நீட்டி நீட்டிப் பேச முடியும். ஆனால் ஒரு படைப்பாளியைப் பற்றி முழுமையான மதிப்பீட்