சார்பின்மையின் சார்பு
தமிழ் இலக்கிய வரலாற்றை நூற்றாண்டு வாரியாகச் சொல்லும்போது இரண்டு காலகட்டங்களை எதிரும் புதிருமாகப் பொதுவாகக் குறிப்பிடுவதுண்டு; இரண்டுமே சமயத் தொடர்பில் வைத்துச் சொல்லப்படுகின்றன. ஒன்று, ‘வடக்கே இருந்து வந்த சிரமண புறச் சமயங்களால் தமிழ் மொழியும் பண்பாடும் அழிந்தது’என்பதுபற்றி. அதாவது சமண- பௌத்த சமயங்களின் மொழிகளாக அறியப்படும் பாலி, பிராகிருதம் போன்ற மொழிகள் தமிழோடு கலந்தன; தமிழர் மத்தியில் அச்சமயங்களின் பண்பாடு கோலோச்சத் தொடங்கியது என்பது இதன் பொருள். கிட்டத்தட்ட இதன் காலமாகக் களப்பிரர் காலகட்டம் சொல்லப்பட்டு அதனாலேயே அதனை ‘இருண்ட காலம்’ என்றழைக்கிற வழக்கம் இன்றுவரை இருக்கிறது. இன்றைக்குப் பல சான்றுகள் - விளக்கங்கள் கூறி எதிர்கொள்ளப்பட்டாலும் மாறிவிடாத அளவிற்கு இருண்ட காலம் என்ற கருத்து வலுப்பெற்றிருக்கிறது.
இரண்டாவது அம்சமும் இவற்றின் தொடர்ச்சியில்தான் அமைகிறது. அவ்