‘ஆகஸ்டில் சந்திப்போம்’ மார்க்கேஸின் கடைசி நாவல்
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் 2014 இல் மறைந்தார். இந்தப் பதிற்றாண்டில் மிகவும் துயரளித்த இலக்கியவாதியின் மரணம் அது. எந்த மொழியில் மொழிபெயர்க்கப்பட்டாலும் அந்த மொழியின் எழுத்தாளராக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் எழுத்தாளரின் இழப்பு. ஒருவேளை மிகவும் ‘கொண்டாடப்பட்ட’ மரணமும் அதுவாகவே இருக்கலாம். எனினும் அந்த மரணம் உலகளாவிய வாசகர்களிடையே ஓர் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. தங்கள் அன்புக்குரிய எழுத்தாளர் விடைபெறுவதற்கு முன்பு தங்களுக்காக விட்டுச் சென்ற படைப்பு ஏதேனும் இருக்குமா என்ற ஏக்கம் காபோவை நேசித்த எல்லா வாசகர்களிடமும் இருந்தது. அந்த எதிர்பார்ப்பு அண்மையில் வெளியாகியுள்ள ‘அன்டில் ஆகஸ்ட்’ (ஆகஸ்டில் சந்திப்போம் ) நாவலின் மூலம் நிறைவேறியிருக்கிறது.
மறைவுக்கு முன்பு ஏறத்தாழப் பத்து ஆண்டுக்காலம் காபோ நினைவிழப்புக்கு ஆளாகியிருந்தார். ‘நினைவுகள்தாம் என்னு