அம்மாவை விழுங்கும் மீன்
அம்மாவை விழுங்கும் மீன்
தனக்கான மீன்களை
கையில் வாங்கினாள் அம்மா
அதிலொரு
பிஞ்சு பருத்திவாலை மீன் இருந்தது
அவளால் அதை ஒதுக்க முடியவில்லை
பிற மீன்களை நறுக்கிவிட்டு
அதை மட்டும் குளிப்பாட்டினாள்
பூப்பதித்த துண்டால் மேனி துடைத்து
பவுடர் பூசினாள்
பருத்திவாலை கண்சிமிட்டியது
அதன் தலையுச்சியிலிருந்து
நாடிவரை காற்றால் வருடி
அம்மா சொடக்கெடுத்தாள்
சிரித்தபடியே அது தன் ரெக்கைகளை நீட்ட
வாரியணைத்த அம்மாவின்
கன்னத்தில் உதட்டைப் பதித்துத்
திறந்து திறந்து மூடுகிறது பருத்திவாலை
கடலைப்போல அதிலுள்ள சுவாசத்தைப்போல
வெடிப்புக் குமிழிகளைப்போல
சின்னஞ்சிறு புழுவைப்போல
இப்போது அம்மா பருத்திவாலைக்கு
இரையாகிக்கொண்டிருக்கிறாள்.
01
அம்மா தனது கண்களைக் கதவுகளைச் சாத்துவதுபோல் சாத்தி
ஜன்னலைத் திறப்பதுபோல் நோயுற்ற அப்பாவின் வேட்டியைத் திறந்தாள்<b