தமிழ்ச் சிறுகதைகளில் உரையாடல்களின் இடம்
ஓவியம்: ஆதிமூலம்
1
தமிழ்ச் சிறுகதைகள் கடந்த நூறாண்டுகளில் வடிவரீதியாகவும் சொல்முறைரீதியாகவும் இசங்களின் இடைவெட்டுகளாலும் தவணை முறையிலேனும் புதுமைகள் கண்டிருந்தாலும், அநேகக் கதைகள் இன்றும் தொடக்கம், நடு, முடிவு என்ற அமைப்பைத்தான் தக்கவைத்திருக்கின்றன. ஆதாரக்கதை நிகழும் விதத்தில்தான் படைப்பின் தனித்துவம் அடங்கியிருக்கிறது. இவ்விடத்தில் சிறுகதைக் கட்டமைப்பு முறையைக் கருத்திலெடுத்து விசாரிக்க வேண்டும். உரைநடையின் கட்டுமானக் கூறுகளான விவரணைகள் / உரையாடல்கள் - இரண்டும் பயன்பாட்டு மட்டத்தில் ஒன்றையொன்று சார்த்திருப்பவையெனினும் அணுகலளவில் அவை நிச்சயம் வேறுபடுகின்றன. மற்றொரு கலைவடிவமான திரைப்படத்தில் விவரணைகளை (இயக்குநரின் பின்னணிக் குரலில் அமைவன) விட கதாபாத்திரங்களுக்கு இடையி