பெரிதினும் பெரிது கேள்
‘சுதேசாபிமானம் ஒவ்வொருவருடைய மனத்திலும் உண்டென்பது உண்மையாயினும் சமயம் வாய்ந்துழி அதனை நெறிப்படுத்தி அதற்குரிய செயல்களைச் செய்ய வேண்டும். அன்றேல் சுதேசாபிமானத்தால் யாரொருவருக்கும் யாதாமொரு பயனுமிலதாம்’ என்கிறார் வ.உ. சிதம்பரம் பிள்ளை (1872-1936). அச்செயல்கள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் அந்த விளைவுகளை ஏன் ஒருவர் பொருட்படுத்தக் கூடாது என்பதையும் அவரே விவரிக்கிறார்.
‘சுதேசாபிமானத்தை உபயோகப்படுத்த வேண்டுவது சுதேசத்தாருக்கு அன்னமின்மை, ஆடையின்மை, நோய் முதலிய இடுக்கண்கள் நேர்ந்தபோதும் தெய்வசிந்தனை, கல்வியறிவு, செல்வச் சிறப்பு முதலியன குன்றியபோதும், சுதேசத்தாருக்கு சுயார்ச்சிதம் இழக்கவும், அடிமைத்தனம் பெறவும் நேர்ந்தபோதுமேயாம். ஒருவர் பிறப்பதற்கு ஆதாரமாயிருந்தவள் அவருக்குத் தாயென்றால் அவரும் அவருடைய முன்னோரும் பிறப்பதற்கு ஆதாரமாயிருந்த தேசம் அவரைப்பெற்ற தாயினும் மேலென்பதற்குத் தடையென்ன?... ஆகவே சுதேசத்தாருக்கு நேர்ந்த வறுமை, துன்பம், அடிமைத்தனம் முதலியவற்றை ஒவ்வொருவரும் அவரவரைப் பெற்ற தாய்க்கே வந்ததாகக் கொள்ளவேண்டும்.’ (சுதேசாபிமானம