மெழுகு
ஓவியம்: ஏ. ராமச்சந்திரன்
இதுவரை ஒருநாள் கூட அவர்களின் புனித நூலை வாசித்தது இல்லை. மண்டியிட்டு யாதுமாகி நிற்கும் ஒருவனிடம் தனது உயிர் பலன்களை வடியும் மெழுகில் பிரகாசிக்க எண்ணியதும் இல்லை. ஏதாகினும் முறையிட ஒருவனை இதுநாள் வரை இழந்துவிட்டோம் என்கிற சிறு வருத்தம்கூட இருந்ததில்லை. இப்படி எத்தனையோ இல்லைகளை எனக்குள் சுமந்து அலைந்துதிரிந்துகொண்டிருந்ததை அறியவே அங்கு வந்தடைந்திருப்பேன்போல. அவ்விடத்தைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் நான்கு மணிநேரத்தைக் கழிக்க வேறு போக்கிடம் இல்லையென்பதே கூடுதல் சிறப்பு. அங்கே வருவோர் போவோரைப் பற்றிய எந்தக் கேள்வியும் உலாவவில்லை. அதன் உந்துதலில் என்னுடைய கால்கள் எப்போதும் தேவசகாய தேவாலயத்தை நோக்கி ஓடியது. பின் அது ஒரு விளையாட்டைப் போல மாறியது .
என்னுடைய விளையாட்டை ரசிக்க, ஊக்கப்படுத்த