தேர்தல் பத்திரம்: கறுப்புப் பணத்துக்கு வெள்ளையடிக்கும் மோடி வித்தை
பாஜக அரசு கொண்டுவந்த தேர்தல் பத்திரத் திட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது, எனவே அது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்ததிலிருந்து இது தேசிய அளவில் பேசுபொருளாக ஆகிவருகிறது. காரணம், இதில் பாதுகாப்பான ஊழலுக்குப் பெரும் வசதி வாய்ப்புகளை அரசே ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது எனும் உச்ச நீதிமன்றத்தின் குற்றச்சாட்டு. இதில் நகைமுரண் என்னவெனில், அரசியலிலிருந்து கறுப்புப் பணத்தை ஒழிக்கப்போகிறோம் என்ற முகாந்திரத்தில் கொண்டுவந்ததுதான் இந்தத் தேர்தல் பத்திரம். கடைசியில் கறுப்புப் பணத்தையெல்லாம் வெள்ளையாக்கி வெளுத்துக் கொடுக்கிறோம் என்ற திட்டமாகத்தான் இதை உருவகித்திருக்கிறார்கள் என்று புரிபட்டிருக்கிறது.
தேர்தல் பத்திரம் என்றால் என்ன, அது எப்படிச் செயல்படுகிறது?
இந்தத் திட்டம் வருவதற்கு முன்பு யாராவது, எந்த நிறுவனமாவது ஒரு அரசியல் கட்சிக்கு நன்கொடை வழங்க வேண்டு மெனில் அதிக பட்சமாக 20,000 ரூபாய் வழங்க முடியும்; அவ்வளவுதான். அதற்கு மேல் வழங்கினால் யார்-எவ்வளவு கொடுத் தார்கள் என்ற விவரத்தை அந்தக் கட்சி பொதுவெளியில் பகிர வேண்டியிருக்கும். போலவே, எந்தப் பெருநிறுவனமும் தங