தலையங்கம்
ஆசிரியர் குழு

தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் விரைவில் நடக்கவிருக்கின்றன. தமிழ்நாட்டில் 1967க்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் மாநிலக் கட்சிகளே செல்வாக்குச் செலுத்திவருகின்றன. தேசியக் கட்சிகள் மாநிலக் கட்சிகள் அளிக்கும் கூட்டணி வாய்ப்புக் கேற்ப

தலையங்கம்-2
ஆசிரியர் குழு

அண்மையில் பாஜகவின் தமிழ்நாட்டுத் தலைவர் நயினார் நாகேந்திரன் நடிகை த்ரிஷா குறித்துப் பேசியிருப்பதும் காங்கிரஸின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி குறித்து பாஜகவின் கரூர் மாவட்டத் தலைவர் பேசியிருப்பதும் பரவலான கண்டனங்களுக்கு உள்ளாகியிருக்கின்றன. இவை தற்செயலாக நழுவிய சொற்கள் அல்ல. பெண்களை அவர்கள் சார்ந்த துற

கடிதங்கள்

மிகக் கொதிப்புணர்வுடைய மொழிப் பிரயோகங்களைத் தாங்கி வந்துள்ளது பிப்ரவரி (2026) இதழ் தலையங்கம். அதில் சற்று அரசியலும் வெளிப்படையாக உள்ளிழுக்கப்பட்டுள்ளது. ‘காலச்சுவடு’ வழக்கமாக எளிதில் உணர்ச்சி வசப்படுவதில்லை. ஆனால், இந்தத் தலையங்கத்தில் தனது உள்ளார்ந்த மனக்குமுறலை நேரிய பார்வையில் சற்

அஞ்சலி: எஸ்.எஸ். ராஜகோபாலன் (1931&2026)
சு. உமா மகேஸ்வரி

2007-2008 கல்வியாண்டு. அப்போது நான் பெருந்துறையில் ஆசிரியராகப் பணி செய்துகொண்டிருந்த நாட்கள். ஈரோடு சம்பத் நகர் பகுதியில் உள்ள கொங்கு கலையரங்கத்தில் நடைபெற இருந்த சமச்சீர் கல்விக்கான சந்திப்பு பற்றி அறிந்தேன். பள்ளி முடிந்து மாலை 5.30 மணியளவில் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றேன். அங்கு என்னைத் தவ

அஞ்சலி: தமிழறிஞர் தெ. ஞானசுந்தரம் (1941 &2026)
ம.பெ. சீனிவாசன்

தெ.ஞா. ‘வைணவ உரைவளம்’ குறித்த ஆய்வறிஞராக அறியப்பட்டபோதிலும், சங்க நூல்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், பெரியபுராணம் முதலான தமிழிலக்கியப் பரப்பு முழுதும் நடந்து பழகியவர். அந்தந்த நூல்களின் ஆழ்ந்தகன்ற நுட்பத்தை அறிந்து கேட்போர் மனம்கொள்ள எடுத்துரைக்கும் ஆற்றல் அவரிடம் பொதிந்திருந்தது. அவரத

கட்டுரை
செந்தூரன் ஈஸ்வரநாதன்

ஆரவாரம், கொண்டாட்டம், அறிவுத்தேடல் கொண்ட மக்கள் திரள், எழுத்தாளர்களின் சந்திப்பு, மகிழ்ச்சியோடு சேர்ந்து எழும் புழுதி என ஆண்டுதோறும் ஜனவரி மாதம் சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நிகழும் புத்தகத் திருவிழா வெறும் வணிகமல்ல; பண்பாட்டு நிகழ்வு. அடுத்த ஆண்டு பொன்விழாவைத் தொடவிருக்கும் இந்த அற

சச்சிதானந்தன் சுகிர்தராஜா
எப்ஸ்டீன் ஆவணங்கள்

மார்-ஏ-லாகோ கிளப்பில் டிரம்ப், மெலனியா க்னாஸ், எப்ஸ்டைன், மேக்ஸ்வெல் ஆகியோர் (2000, பிப்ரவரி 12) முதலிலேயே இதைச் சொல்லிவிடுகிறேன்: இந்தக் கட்டுரையில் தூஷணமான சொற்களும் பாலின சம்பந்தப்பட்ட காரியங்களும் உள்ளன. காமசூத்திரம் என்ற நூலே இருக்கிறது என்பதைத் தெரியாதிருக்கிற அதீத சுத்தவாதிகள், மாலைபோட

அனுபவம்
விர்ஜினியா ராபர்ட்ஸ் ஜூஃப்ரே

விர்ஜினியா ராபர்ட்ஸ் ஜூஃப்ரே (Virginia Roberts Giuffre) எழுதிய ‘Girl: A Memoir of Surviving Abuse and Fighting for Justice (2025)’ என்ற நூல், தனது குழந்தைப் பருவத்தில் சந்தித்த துஷ்பிரயோகங்கள், பாலியல் கடத்தல், அதிகாரமிக்க மனிதர்களுக்கு எதிராக நீதி வேண்டி அவர் நடத்திய நெடிய போராட்டம் ஆகி

எப்ஸ்டீன் ஆவணங்கள்
க. திருநாவுக்கரசு

நோம் சோம்ஸ்கியும் அவரது மனைவி வலேரியா வாஸர்மேனும், வலதுபுறம் ஜெஃப்ரி எப்ஸ்டீனும் நோம் சோம்ஸ்கி. இந்தப் பெயரை அறிந்திருப்பவர்களில், அவரது எழுத்துக்களை ஓரளவு படித்திருப்பவர்களில் பலருக்கும் அவர் நமது காலத்தின் மாபெரும் சிந்தனையாளர்களுள் ஒருவர் என்ற அளவில்தான் தெரிந்திருக்கும். மொழியியல் துறையில

கவிதைகள்
சம்யுக்தா மாயா

ஓவியம்: மதுரை பாபு 1.  மலைச்சிகர உச்சியில் உயர்ந்த மரக்கிளைகளை ஊடுருவும் வாடைக் காற்றில்... மென்சோகத்துடன் பூத்திருக்கும் ஜகராண்டா மலர்களின் தனிமை... புகை போன்ற கால்களால் மேகங்களுக்கிடையில் நடக்கிறது. கரடுமுரடான மர வேர்களில் தும்பிக்கையை ஊன்றி... துயர் தாங்கி ஒற்றையாய் நிற்கி

கட்டுரை
பக்தவத்சல பாரதி

ஈழத் தமிழ்ச் சமூகம் நீண்ட நெடிய வரலாற்றின் ஊடாகக் கட்டமைந்தது. இந்த வரலாறு என்றுமே உறைபனியல்ல. அது ஓடும் ஜீவநதி. அதனால்தான் இந்தியத் தமிழ்ச் சமூகத்தைக் காட்டிலும் ஈழச் சமூகம் மாறுபட்ட தொன்மை, தொடர்ச்சி, அசைவியக்கங்கள் கொண்டுள்ளது. சிறிய தேசம் என்றாலும் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பிரதேச, வட்டார வேற

கட்டுரை
இ. அண்ணாமலை

இந்திய மொழிகள் (மைய அரசின் சித்தாந்தப் பார்வையில் பாரதிய பாஷைகள்) இந்தியத் துணைக்கண்டத்தில் வழங்கும் பல நிலைகளில் உள்ள நான்கு (அந்தமான் மொழிகளைச் சேர்த்தால் ஐந்து) மொழிக் குடும்பங்களைச் சேர்ந்த, பெரும் எண்ணிக்கை கொண்ட மொழிகள் என்பது பெரும்பான்மையினரது புரிதல். இந்தப் புரிதலை மாற்றுவதில் இந்திய அரசு

கதை
வைரவன் லெ.ரா.

ஓவியம்: நரசிம்ம பாலாஜி சிறந்த, பதப்படுத்தப்பட்டு, நெடுங்காலமெடுக்கும் ஒயினில் மெல்லிய இனிப்பற்ற சுவையுண்டு. எளிமையாக இப்படிச் சொல்வார்கள்; ஊறல் போட உபயோகப்படுத்தப்படும் ஓக் பேரல்கள் அதற்குக் காரணம் என. ஆனால் மரங்களின் கலங்கள் அளிக்கும் சுவை வேறு, உலோகமாக இருந்தாலும் சரி. ஒயினிலிருக்கும் இயல்ப

கற்றனைத்தூறும்- 15
சாரா அருளரசி

வரைகலை: மு. மகேஷ்   காலையின் அன்றாடங்களிலிருந்து தப்பித்து, பள்ளி அமைந்திருக்கும் ஊருக்குச் செல்லும் பேருந்தில் அவசர அவசரமாக ஏறி இருக்கையில் அமர்ந்து மூச்சிரைக்கையில் கிடைக்கும் ஆசுவாசத்தை இப்போது நினைத்தாலும் குழந்தையின் உள்ளங்கைபோல் வெதுவெதுப்பான மென்மையுடன் தித்திக்கிறது. என்னளவி

கட்டுரை
ஜெ. பாலசுப்பிரமணியம்

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காலனிய அரசு இந்திய மக்களுக்கு மேற்கத்தியப் பாணியிலான கல்வி முறையை அறிமுகப்படுத்தப் பொதுக்கல்விக்கூடங்களை ஊக்கு வித்தது. தமிழகத்தில் பொதுப்பள்ளிக் கூடங்களை உருவாக்க பிரிட்டீஷ் இந்திய அரசு முயற்சித்தாலும் இங்கிருந்த சாதியப் பாகுபாடு தலித்துகளைப் புறந்தள்ளியது. வெவ்வ

கவிதைகள்
வே.நி. சூர்யா

ஓவியம்: மதுரை பாபு 1. டிசம்பர் காற்று இம்முழுபிரபஞ்சத்திலும் முதல் முறையாக ஏதோவொன்றை ஸ்பரிசித்த தருணத்தினின்றுப் புறப்பட்டு, மின்னல்களை ஈன்றெடுத்து, வழியிலெல்லாம் நிலக்காட்சிகளால் பாகம் பாகமாகக் கழற்றப்பட்டு, இதயமிழந்து, நீரில் மூழ்கிய குரல்களை அணிந்து, பாழடைந்த இடங்களைக் காற்றிசை

கதை
மிலன் குந்தேரா; தமிழில்: அகிலா ஸ்ரீதர்

ஓவியம்: மணிவண்ணன் அது ஜூன் மாதம், காலை நேரக் கதிரவன் மேகங்களிலிருந்து எட்டிப் பார்த்துக்கொண்டிருக்க, பாரீஸ் தெருவில் மெல்ல நடந்துகொண்டிருந்த அலான் இளம்பெண்களைக் கவனித்தான்: அவர்கள் ஒவ்வொருவரும் பெல்ட் அணிந்து கீழிறங்கிய கால்சட்டைக்கும், மேலேறியிருந்த மிகச்சிறிய மேலாடைக்கும் இடையில் தங்கள் தொப

மதிப்புரை
ப. சகதேவன்

காந்த்ருக் (நாவல்) சதீஷ் சப்பரிகே தமிழில்: கே. நல்லதம்பி வெளியீடு:  காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி. ரோடு நாகர்கோவில்-1 பக். 424  ரூ. 550 சதீஷ் சப்பரிகே என்ற பெயரில் சப்பரிகே தென் கர்நாடகத்தின் மேற்குப் பகுதியில் குந்தாப்புராவை அடுத்துள்ள ஒரு கிராமம். சப்பரிகேயைப் போலப் பல

உள்ளடக்கம்