அறிவியலின் அரியணை
ஸ்டீஃபன் ஆக்கிங் யார்? அதை காரல் சாகன் சொல்லித் தெரிந்து கொள்வது நல்லது. ஆக்கிங்கின் அன்பு நண்பர் அவர். இயற்பியல் துறையில் நோபல் பரிசு பெற்றவர். ஆக்கிங்கின் புகழ்வாய்ந்த ‘எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்’ நூலுக்கு எழுதிய அணிந்துரையில் காரல் சாகன் எழுதுகிறார்:
1974 இளவேனிற்காலத்தில், அதாவது வைகிங் விண்கலம் செவ்வாய்க் கோளில் இறங்குவதற்கு ஏறத்தாழ ஈராண்டு முன்னர் வேற்றுக்கோள் உயிரினங்களைத் தேடுவது எப்படி என விவாதிப்பதற்காக இங்கிலாந்தில் லண்டன் அரசச் சங்கத்தாரால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் நான் கலந்து கொண்டிருந்தேன். தேநீர் இடைவேளையின்போது பக்கத்துக் கூடத்தில் இதைவிடப் பெரிய கூட்டம்