இஸ்லாமியத் தமிழ் இதழ்கள்
விழுதிறக்கிய பெருமரங்களுக்கு மத்தியில் ஒரு சிறு செடியின் இருப்பிற்கான போராட்டம்தான் இஸ்லாமியத் தமிழ் இதழ்களின் வரலாறு. விழுதுகளின் விலாசத்தைப் பேசுவதற்குப் பதிலாக வேர்களிலிருந்து விசாரணையைத் தொடங்க வேண்டியிருக்கிறது.
ஊடகத்துறையில் தனக்கான இருப்பிடத்தைத் தகவமைத்துக் கொள்ளாத சமுதாயத்தில் இதழ்களின் இருப்பும் பங்களிப்பும் வருத்தங்களாலும் சவால்களாலுமே பின்னப்பட்டிருக்கின்றன. பொருளாதாரம், கல்வியறிவு, சமூகச் சூழல் போன்றவற்றில் பின்தங்கிய இஸ்லாமியத் தமிழ்ச் சமூகத்தில் இதழியலுக்கான உரிய இடமின்றிப் போயிருக்கிறது. மார்க்கப் பின்புலத்திலிருந்து நவீனங்களைப் பயன்படுத்துவதில் ஏற்பட்ட தொடக்கநிலை தடைகளும் நெருக்கடிகளும் இஸ்லாமிய இதழியலின் வளர்ச்சிக்கு பெரும் தடையாய் அமைந்தன.
பின்னடைவுக்கான காரணங்கள்
ஹலால், ஹராம் வரையறைகளை முன்னிறுத்தி நவீனங்களைப் புறம்தள்ளும் அன்றைய சமூக மனநிலை வானொலி, ஒ