முதலில் கட்டுங்கள், அவர்கள் வருவார்கள்
மதுரையைச் சேர்ந்த பாலா சுவாமிநாதன் அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் கணினித்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். நியூயோர்க் நெடுந்தீவில் பிரபல நிதி நிறுவனம் ஒன்றில் ஆய்வாளராகப் பணியாற்றுகிறார். கடந்த மாதம் பல்லாயிரம் டொலர்கள் வைப்புக் கொடை அமைப்பதன் மூலம் நியூயோர்க் ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவதற்கு ஒப்புதல் பெற்றுவிட்டார். அவருடனான நேர்காணல்.
சமீபத்தில் தமிழ் பேசும் உலகத்தை ஆச்சரியப்படுத்தி யிருக்கிறீர்கள். நியூயோர்க் ஸ்டோனி புரூக் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதற்கான ஒப்புதலைப் பெற்றிருக்கிறீர்கள். இது எப்படி சாத்தியமானது?
2011இல் எங்கள் மூத்த மகன் இசைமாறன் பிறந்ததிலிருந்து தமிழ் மொழியை இல்லத்தில் எழுதவும் பேசவும் கற்றுக்கொடுத்து வந்தோம். நாளடைவில் சில நண்பர்களின் குழந்தைகளும் எமது புதல்வர்களோடு சேர்ந்து தமிழ் படிக்கத் தொடங்கினர். இதை முறைப்ப