சாந்தி
சாந்தி
சாதாரணமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்
என்றதற்காக முதலில் தொலைந்த என் இரண்டு ரூபாயை
சாதாரணமாகவே எடுத்துக் கொண்டேன்
கூடவே தொலைந்து வரும் இரண்டு ரூபாய்களை
எங்ஙனம் புரிந்துகொள்வேன்
நவீன அரசாங்கம்
கல்விக்கூடங்கள்
மருத்துவமனைகள்
பெரிய பெரிய மால்கள்
ஒரு பக்க விளம்பர நகைக்கடைகள்
உறங்குவதில்லை மேலும் அவை
கபடமற்ற வரவு செலவுக்காரனை
ஏளனம் செய்கின்றன
சொந்த நாணயத்தை ஏவிவிட்டு பரிக
சிக்க வைக்கும் வல்லமைக்குமுன்
எதுவும் புரிவதற்கில்லை
ஆகவே இரண்டு ரூபாயாக வைத்து
விடுங்கள்
என் நெற்றியில்.
பேறு
குழந்தை ஈனுகிறாள்
பால் ஊட்டுகிறாள்
பெ