பேரினவாதத்தின் கோரமுகம்
இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதியின் தலைநகரும் உலகின் மிக முக்கியமான பௌத்த கேந்திரமுமான கண்டி நகரின் திகன, அக்குறணை போன்ற பகுதிகளில் முஸ்லிம்கள் மீதான பௌத்தப் பேரினவாதிகளின் தாக்குதல்களில் இதுவரையில் ஒருவர் பலியாகி இருக்கிறார்; முஸ்லிம்களின் பொருளாதார மையங்கள், வீடுகள் மீதான தாக்குதல்களின் சேத மதிப்பு விபரங்கள் இன்னும் முறையாகக் கணக்கெடுக்கப்படவில்லை. ஏறத்தாழ முந்நூறு கோடிகளுக்கும் மேலான சொத்தழிப்புகள் இருக்கலாம் என்கிறது உத்தியோகப்பூர்வமற்ற கணக்கீடு. இனவாதத் தாக்குதல்கள் முடிவுக்கு வந்திருந்தாலும் இன்னும் பதற்றம் முழுமையாக விலகவில்லை. மீண்டும் இப்படியான தாக்குதல்கள் இடம்பெறலாம் எனும் அச்ச நிலையைப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் களப்பணிகளில் ஈடுபட்டபோது காண நேர்ந்தது. சமூக ஊடகங்கள் இதனைக் ‘கலவரம்’ என்று குறிப்பது நெறிகேடு. ஏனெனில் வெறியூட்டப்பட்ட இரண்டு சமூகக் குழுக்களின் மோதல் அல்ல இது. மு