நிலையாமையின் ஜொலிஜொலிப்பு
எல்லா ஆட்டமும் 40 வயது வரைதான். நாற்பதில் நரைத்தூதை அனுப்பிக் காலன் நம்மைக் கவர்ந்துகொள்வான் என்கிறது வளையாபதி. ஆனால் நாற்பதில்தான் நாய்க்குணம் தொடங்குவதாகச் சொல்கிறது நம் நாட்டுப்புற மரபு. இந்த நாய்க் குணத்தை வாழ்வில் எரிச்சல் மிகுந்து குரைக்கத் துவங்கும் பருவம் என்று சொல்வதுண்டு. உடலிச்சை தணியாது நாய் போல் அலைந்து திரியும் காலம் என்றும் சொல்வதுண்டு. காமத்தின் வினோத ரூபங்கள் கதைகளில் சொல்வதைக் காட்டிலும் புதிரானவை; அச்சமூட்டக் கூடியவை. ஷகீலா படம் ஓடிய அரங்கிற்குள் காமம் கைத்தடியை ஊன்றியபடி நகர்ந்து, நகர்ந்து வந்ததைக் கண்டிருக்கிறேன். சொன்னால், “அய்யோ! நீயா? அங்கா?” என்று கூப்பாடு போடுவீர்கள் என்றுதான் நான் எதையுமே சொல்வதில்லை. பாவம், அந்தச் சனியன் இந்த வயதிலாவது கிழவரை விடுவித்து விட்டிருக்கலாம். இளமை நிலையாததுதான். ஆனால், ஆசை நிலைத்தது போலும்.
வலிக்காமல் சாவு வந்துவிட்டால்