திரிசங்கு
திரிசங்கு
நீரிலூறிய பாக்குமட்டைக்குள்
புளிச்சோறும் கிழங்குப் பொரியலோடும்
செங்கொம்பு மாட்டுவண்டியில்
மணிகள் அலைந்து அசைய
புழுதிப்பாதை திரும்புகையில்
மிதிலை நெல்வயலில் பிறந்து
சிவதனுசு முறிந்து அயோத்தி எய்திய
அவளது கதையைப் பாட்டி சொல்ல
மலையருவிப் பயணத்தினிடையில்
மறுநாள் வாழ்வு
வேறொரு பெருநகரத்தில் என்பது தெரிந்திருக்கவில்லை.
மஞ்சளோடு மிதிலையின் வழுதுணங்காய்
பதமாய் வெந்துகொண்டிருக்கையில்
கானகத்துக்கு சென்றாளவள் என்று
பாட்டி தொடர்கையில்
புதிய நகரின் உயர்மாடிக் கட்டிடத்தின் அருகே
ஒட்டகத்தின் மீதமர்ந்து
கடலின் நீல
ஆச்சரியத்தை அளக்க முடியாமல்
வேறொரு நகரத்துக்குப் பெயர்ந்திருந்தோம்
நந்தியாவட்டைத் தொட்டியோடு
மீண்டும் மீண்டும் கழற்றி அணிந்து விளையாடிய
அவளது நெளிமெட்டிகளையும்
செம்மணல் தாரை பரவிய ஏரிக்கரையையும் விட்டு
ஆதிக்குடிப் பெண