ஈயாத புல்லர் இருந்தென்ன போயென்ன
இந்தச் சமூகம் மேம்பாடு அடைய வேண்டும் என்ற எண்ணம் அரசியல், பொருளாதாரம், கலை - இலக்கியப் பகுதியினருக்கு இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆன்மிகவாதிகளுக்கும் இது இருக்க வேண்டும். அவர்கள் சமூகத்தின் அமைதியையும் ஒருங்கிணைப்பையும் நல்லிணக்கத்தையும் முன்னெடுத்துச் செல்வதை மனித குலம் எதிர்பார்க்கிறது. இறைபக்தியை முன்வைத்தால், ஆன்மிகவாதிகளுக்கு இது அத்தியாவசியமான பணி. இறைவனின் மகத்துவங்களையோ மதத்தின் தத்துவங்களையோ மக்களிடம் கொண்டுவர ஒவ்வொரு மதத்தினரும் தத்தமக்கான வேதநூல்களைக் கொண்டுள்ளனர். இந்த வேத நூல்கள் எவற்றையெல்லாம் வலியுறுத்துகின்றனவோ அவற்றை உள்ளத்தின் மெய்த்தளமாக்கி அதன் அடிப்படையில் நோக்கினால் சமூகம் பயன்பெறும்.
எனினும் உலகம் இத்தகைய நிலைக்கு அப்பால் போய்விட்டது. மதங்களின் நோக்கம் ஒன்றாகவும் ஆன்மிகவாதிகளின் நோக்கம் பிறிதொன்றாகவும் இருந்து வருவதை வரலாறு காட்டுகிறது. சில விதிவிலக்குகள்; அவை பொருட்படுத்