கோதைமங்கலம்
அலுவலகத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் போது அஞ்சல் வந்திருப்பதாக அழைப்பு. கொண்டுவந்த புதுப் பையனுக்கு வழி தெரியவில்லை. அவன் வந்து சேர்வதற்குள் கிளம்பித் தெரு முக்கில் சென்று நின்றேன். நான் பதினொரு மணிக்கு வேலையைத் தொடங்கியிருக்க வேண்டும். குழந்தைகளையும் பிறகு பத்து மணிக்குப் பயந்து வீட்டிலிருந்து ஓடும் கணவர்களையும் அனுப்பி யிருந்த பெண்கள் நேற்றைய உடைகளிலும் மயிர்ப்பிரி பறக்கிற கொண்டையிலுமாகக் கடைகளுக்குச் சென்று வந்து கொண்டிருந்தார்கள். வேலைக்குத் தாமதமான பெண்ணொருத்தி வண்டிக் குப் பதிந்துவிட்டுக் காத்திருந்தாள். நானும் தாமதமானால் அவளைப் போல காருக்கு அல்லது ஆட்டோவுக்குக் காத்திருக்க வேண்டும். நேற்றும் என் வண்டி தயாராகவில்லை. இன்னொரு முறை அந்தப் பையனைக் கூப்பிட்டதும் வழி கேட்டுக்கொண்டே வந்து வண்டியை எனக்கு முன்னால் நிறுத்தினான். அவனுக்கு வீட்டைக் காட்டலாம் என்பதை இப்போதைக்குத் தள்ளிவைத்துவிட்டு வந்ததைக் கைய