இல்லாமல் போவது
தடியைக் காற்றில் மீண்டும் வீசிய பின் தரையைத் தட்டி, அடித்து விரட்டுவதுபோல ராஜம்மாள் அவர் களிடம் அக்கம்பைக் காட்டினாள். பின் களைத்துப் போய் அச்சம் கலையாத கண்களுடன் மூச்சு வாங்கினாள். அந்த அதட்டலுக்குப் பயந்து சென்றுவிடு வார்கள் என நினைத்தற்கும் மாறாக அவர்களிடமிருந்து சிரிப்புச் சத்தத்தைக் கேட்டாள். சிறிய படிக்கட்டு போன்ற உயரம் கொண்ட எண்ணெய் படிந்த தலையணையைத் தூக்கிக் கண்ணாடி யைத் தேடி எடுத்துப் பயத்தை மறைத்த வளாக உலர்ந்த உதடுகள் நடுங்கச் சுற்று முற்றும் கண்களைச் சுழற்றினாள். சுவர் மேல் ஒருவனும் ஓட்டுச் சார்பின்மீது மற்றொருவனும் அமர்ந்திருக்க துவைக்கும் கல்மீது உட்கார்வதற்காக வேறொருவன் அந்த ஈரத்தின் மீது துணியைப் போடுவது மங்கலாகத் தெரிந்தது. அவர்களில் ஒருவன் ஓட்டுக்கூரையிலிருந்து இறங்க முயல்வதைக் கண்டதும் அருகில் கவிழ்ந்துகிடந்த தம்ளரை எடுத்து எறிந்தாள். கரண்டிக்கு விரல்கள் முளைத்தது போன்ற சிறிய கையில் அதை அவ