இசை
உள்ளே
புறநகர் டீ கடை வாசலில்
அசந்தர்ப்பமாக
ஒரு அதிநவீன சொகுசு கார்
அதன் உரிமையாளன்
போனைத் தூக்கிக்கொண்டு
ஃப்ரேமுக்கு வெளியே போய்விட்டான்
இப்போது ஒரு காட்சி
ஒரு அதி நவீன சொகுசு காரின் மேல்
ஒரு அரைவாசி டீ டம்ளர்
என்னவோ ஆகிவிட்டது எனக்கு
இமை கொட்டாது வெறித்துக்கொண்டிருக்கிறேன்
என்னவோ இருக்கிறது அதற்குள்.
னிஹிளிஜிணி&களின் காலம்
1.
“ எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு”
என்கிற கோட்டின் வழியே
கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதிசெய்து ஜம்மென்று அமர்ந்துவிட்டார்.
2.
தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும்.
3.
கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்
எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது
ஒரு கோட்!
4.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்
ஒரு கோட்டாக.
5
கோட்களின் காலம் முடிந்துவிடக்கூடாது என்பதற்காக
நிகழ்த்தப்பட்ட திருவிளைய