அமிர்தசரஸ் ரயில் நிலையம்
இன்னும் கேட்கின்றன மக்களே
உங்கள் அழுகுரல்களும் மரண ஓலங்களும்
கேட்கத்தான் வந்திருக்கிறேன்
தென்கோடியிலிருந்து இந்தத்தமிழன்
இளங்குளிர் தழுவும் புரட்டாசி மாத அதிகாலையில்
அமுதம் கடலாகப் பொங்கும் இந்த நகரத்திற்கு
எல்லை கடந்து வந்த, எல்லை கடந்துபோன
எல்லாமும் மறந்துபோன, எல்லாரும் மறந்துபோன
உங்கள் அழுகுரல்களும் மரண ஓலங்களும்
இன்னும் கேட்கின்றன மக்களே
எழுபது வருடங்களா ஏழு நூறு யுகங்களா
கண்ணீருக்கு ஏது வயது
வயதேது ரயில் நிலையத்திற்கும்
உட்கார்ந்திருக்கும் இந்த பெஞ்சுக்குள்தானே
ஆயிரக்கணக்கான மணல் துகள்களின் சோகங்கள்
சிமெண்டின் இறுக்கத்தோடு புதைந்துகிடக்கின்றன
அதில்தானே தலைமுறைகள் அமர்ந்திருக்கின்றன
உங்களுக்கு எதிரொலிகள் உண்டோ குரல்களே?
ஆனந்தக் குரல்கள் எல்ல