திரை எனும் கொல்லிப்பாவை
கலைஞர் மறைந்தபொழுது நேரில் சென்று அஞ்சலி செலுத்த வேண்டும் என்று - எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மறைவின்பொழுது தோன்றாத - ஓர் எண்ணம் நெஞ்சின் ஓரத்தில் தளிர்த்தது. ஈடேற்ற இயலாதது என்று மூளை சொல்லியதில் அவ்வெண்ணம் உடனே கரிந்தும் போனது. இராஜாஜி அரங்கில் வரிசையாக அஞ்சலி செலுத்தியவர்களில் அரசியல்வாதிகளும் திரைத்துறையினருமே மேலோங்கி இருந்தனர். நேரலையில் நான் பார்த்த அளவில் ஓர் எழுத்தாளரும் இல்லை. கவிப்பேரரசு நடிகர் பட்டியலில் சேர்வார் என்பதால் புறனடையாகக்கூட ஒருவரும் என் கண்ணில் தட்டுப்படவில்லை.
மனம் அடங்கவில்லை. கலைஞருக்கு ஆங்கிலத்தில் இரங்கலுரை எழுதிக்கொண்டே இடையிடைப் பெருமாள்முருகனின் இரண்டு கட்டுரை நூல்களைப் படித்துக்கொண்டிருந்தேன். ஒன்று, ‘நிழல் முற்றம்’ நாவலுக்கு அடிப்படையாக அமைந்த திரையரங்க அனுபவங்களின் பதிவு: ‘நிழல் முற்றத்து நினைவுகள்’ (முதல் பதிப்பு: கயல் கவின் பதிப்பகம், 201