தலித்துகளுக்கும் திராவிட அரசியலுக்குமான கடைசிக் கண்ணி
திராவிட அரசியலின் தோற்றத்தில் தலித்துகளின் பங்கு அளப்பரியது. திராவிடச் சித்தாந்தம், சொல்லாடல்கள் தலித்துகளிடமே முதலில் தோன்றியது எனலாம். பிராமணர் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, சாதி ஒழிப்பு போன்ற கொள்கைகள் தலித்துகளிடம் முகிழ்த்துப் பின்பு திராவிட அரசியலால் மக்கள் மயப்படுத்தப்பட்டது. திராவிடன் என்ற சொல்லாடலை அரசியல் பதமாக்கியது தலித்துகளே. எனது ‘சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை 1869-1943’ என்ற நூல்தலைப்பு குறியீட்டுரீதியாக ‘சூரியோதயம்’ என்று தலித்துகளின் அறிவு மரபையும், ‘உதயசூரியன்’ என்று அவர்களின் அரசியல் மரபையும் குறிப்பதாகவே அமைத்தேன். தலித்துகளின் அறிவியக்கமும் அரசியல் இயக்கங்களும் திராவிட அரசியலுக்கான நாற்றாங்கால்களாக இருந்துவந்ததைத் தலித்துகளின் இதழியல் வரலாற்றின் மூலமும் நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.
திராவிடக் கருத்தியலின் முன்னோடிகளாக இருந்த தலித்துகள் திராவிட இ