வரலாறு விடுதலை செய்யும்
‘தமிமிழ்நாட்டிலுள்ள வகுப்புவாதக் கட்சியினர் பிராமணர்களைத் துரத்திவிட்டு சுயேச்சையான திராவிடப் பிரதேசம் அமைப்போம் என்கிறார்கள். ஒரு பாகிஸ்தான் ஏற்பட்டது போதும். என்ன நடந்தாலும் இனி நாடு துண்டாடப்படாது. ஸ்திரமான சர்க்காரை காங்கிரஸ்தான் தரமுடியும்’ என்று சென்னையில் பிரசாரம் செய்யவந்த பிரதமர் ஜவாஹர்லால் நேரு முழங்கினார். (தினமணி, 1.2.1957). நேருவின் நம்பிக்கை பொய்க்கவில்லை. அவர் குறிப்பிட்ட ‘வகுப்புவாதக் கட்சி’ பிராமணர்களைத் துரத்தியடித்துவிடவில்லை. நாட்டைத் துண்டாடித் திராவிட நாட்டையும் அமைத்துவிடவில்லை. அதே சமயம், காங்கிரஸ் மட்டும்தான் அகில இந்திய அளவில் நிரந்தரமான ஆட்சியைத் தரமுடியும் என்னும் நம்பிக்கையை நொறுக்கிப்போட்டது. 1967 தேர்தலில் காங்கிரஸின் ஆதிக்கத்தை முதல்முறையாக வீழ்த்திய வெகு சில மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு மாறியது. இந்திய அரசியல் வரலாற்றில் இது முக்கியமான திருப்பம் என