ஆயிரம் கால் சலங்கை
1
சுழன்று சுழன்று
ஆடுகிறாள் அனார்கலி
கருவிழியிலிருந்த நடனம்
பட்டு
உடைந்து நூறாய்ப் போகிறது கண்ணாடி
விடாமல் அவள்
ஆயிரம் ஆயிரம் சுவர்களிலும்
விதானங்களிலும் ஆடுகிறாள்
ஒவ்வொரு நடனத்தையும்
ஒருமுறையேனும்
எப்போது பார்த்து முடிப்பான், பாவம் சலீம்
2
முகர்ந்தால் ஒளிரும் அபூர்வத் தோட்டம்
முகப்பில் அவனைக் கண்டு
நீலத் தடாகம் தெறிக்க ஓடோடி வந்தாள் அனார்கலி
கழுத்துக் குழியில் தலை வைத்து அவன்
உள்ளங்கையை விரலால் அழுத்தி
மொட்டுக்கள் கட்டி ஆடவா என ஈரம் கசிந்தாள்
பறிக்க இல்லை
பார்க்கப் போ
குறுவாள் வீச்சாக இடை பிர