வெள்ளை அமெரிக்கா
2017இல் வேர்ஜீனியா மாநிலத்தில் உள்ள சார்லட்ஸ்வில் நகரில் வெள்ளை இனவாதிகளால் ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது. தாங்கள் உயர்வானவர்கள் என்ற கருத்து நிலையைக் கொண்டு இதனை நடத்தினர். வலதுக்கு மாற்றீடு, நியோ கொன்பிடரேட் அல்லது தெற்கு தேசியவாதிகள், Ku Klux Khan (KK or Klan) நியோ நாசிகள் ஆகிய குழுக்களுடன் உதிரி ஆயுதக் குழுக்களும் இணைந்த ஊர்வலம் இது. (Alt-right, neo-Confederates or Southern Nationalist, white nationalists Klansmen, neo-Nazis). Ku Klux Khan (KK or Klan) இதில் ஒவ்வொரு கேயும், ஒவ்வொரு காலகட்டத்தைக் குறிக்கும்.முதலாவது கே 1860-1870ஐயும், இரண்டாவது 1915ஐயும், மூன்றாவது 1950ஐயும் குறிக்கும். ஒவ்வொரு காலகட்டத்திலும் வெள்ளை இனவாதிகள், கறுப்பின மக்களை ஒடுக்கி ஆண்டனர். இதன் கிளைகள் கனடா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகளில் உள்ளன. பல நகரங்கள் இனவாதத்துக்குத் துணை போனவர்களின் சிலைகளை அகற்றி