1924 – காவிரி பெருவெள்ளமும் பேரழிவும்
மிகவும் துல்லியமாகக் கூறுவதென்றால் 94 ஆண்டுகளுக்குப் பின்னர் மேற்குத் தொடர்ச்சி மலையில் மாமழை பொழிந்து வருவதால் தென்னிந்தியாவில் தண்ணீருக்காக முட்டிமோதும் கேரளா, கர்நாடகா, தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்களும் பெருவெள்ளத்தின் பேரழிவில் சிக்கிக்கொண்டிருக்கின்றன. கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், 1924ஆம் ஆண்டு வெள்ளத்தைவிடவும் மோசமான விளைவை இந்த வெள்ளம் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார். இந்தக் கருத்தைத் தமிழ் இந்து பத்திரிகையின் (2018 ஆகஸ்ட் 15) தலையங்கமும் ஒப்புக்கொண்டுள்ளது. அதில் கட்டுரை எழுதிய செ. இளவேனில், “1924இல் பெரும் வெள்ளத்தைச் சந்தித்தது கேரளம்” எனச் சுட்டுகிறார். அவ்வாறு குறிப்பிட்டுக் கூறுமளவிற்கு அந்த ஆண்டு என்னதான் நிகழ்ந்தது?
இயற்கைப் பேரிடர் பேரழிவை விளைவிப்பதால் உலகளவில் அது குறித்த ஆராய்ச்சி மிகச் சமீபகாலங்களில்தான் மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவிலோ அந்த ஆராய்ச்சி அரும்பு நிலைம