தலையங்கம்

  எல்லைக்கோடுகளின் முக்கியத்துவம் நாட்டையே உலுக்கிய லக்கிம்பூர் கேரி படுகொலைகள் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட்டம் நடத்திய விவசாயிகள்மீது ஒன்றிய அமைச்சரின் மகனுடைய கார் மோதியதில் ஏற்பட்ட உயிரிழப்புகள், அதைத் தொடர்ந்து நடந்த வன்

கடிதங்கள்

கடிதங்கள் கபாத்திரங்கள் கொங்கு பாஷை பேசுவதாலேயே அது அந்த மண்ணின் படமாகுமா? அரிவாள் தூக்கிய வன்முறை, ஆக் ஷன் படத்துக்குப் பொருத்தமாவதால் மதுரை, தென் மாவட்டங்கள் லொகேஷனாக, அதுவே அம்மக்களின் கலாச்சாரமாகுமா? அப்படித்தான், பா.ரஞ்சித் தலித் படங்கள் தருவதாகச் சொல்லப்படுவதும். தலித்துகளின் இன்றைய பிரச்சி

கட்டுரை
சைமன் சவுச்சார்த்

தவறான தகவல்களால் உருவாகும் நெருக்கடி பாஜக வாட்ஸ்அப் குழுக்களின் பங்கு என்ன?   கோவிட்-19 பெருந்தொற்று தொடங்கியதிலிருந்தே சமூக ஊடகங்களில் ஏற்கெனவே கவலைக்குரியதாக இருக்கும் ஒரு போக்கினைத் தவறான தகவல் தரும் போக்கு அதிகரிக்கச் செய்திருக்கிறது. வைரஸ் திட்டமிட்டுப் பரப்பப்பட்டது அல்லது வை

கட்டுரை
பி.ஏ. கிருஷ்ணன்

மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் இரட்டைக்குழல் துப்பாக்கிகளா? இன்று பொதுவாகப் பல ஊடகங்களும் அறிவுஜீவிகளும் சொல்லும் கருத்து இது: இந்திய மக்களுக்கு உண்மையான காவலராக இருப்பது உச்சநீதி மன்றம். காய்கறி விலை அதிகரிப்பதைத் தடுப்பதிலிருந்து, காஷ்மீருக்கு 370 தேவையா என்ற கேள்விக்குப் பதிலளிப்பதுவரை

அஞ்சலி: நெடுமுடி வேணு (1948-2021)
உண்ணி. ஆர்

அற்புதம் தம்பு (1948) ஒளிப்பதிவாளர் வேணு வாயிலாகத்தான் நெடுமுடி வேணுவுக்கு நான் அறிமுகமானேன். ‘அவனவன் கடம்ப’ என்ற நாடகத்தின் பயிற்சி முகாமில் நாங்கள் மூவரும் ஆளில்லாத இடம்பார்த்து அந்த இரவில் ரகசியமாக ‘ஆனந்த’த்தைப் பகிர்ந்துகொண்டோம். பின்னர் நாங்கள் பார்த்துக்கொண்டத

கதை
அ. முத்துலிங்கம்

ஓவியங்கள்:  பி.ஆர். ராஜன் எங்கே கதை தொடங்குகிறதோ அங்கே இருந்து ஆரம்பிப்பது நல்ல பழக்கம். நைரோபியில் வானளாவிய கட்டடங்களில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இயங்கின. எந்த ஒரு பெரிய நிறுவனத்திலும் கடைநிலை ஊழியன் என ஒருவன் இருப்பான். கட்டடத்துக்குக் கட்டடம், நிறுவனத்துக்கு நிறுவனம், அவன் செயல்பாடு

கட்டுரை
 சச்சிதானந்தன் சுகிர்தராஜா

  பாமீயன் பௌத்த சிலை ரவீந்திரநாத் தாகூரின் ‘காபுலிவாலா’ சிறுகதையைப் படித்தபோதுதான் ஆஃப்கானிஸ்தான் என்று ஒரு நாடு இருக்கிறது என்று அறிந்துகொண்டேன். நான் கல்லூரியில் படித்த நாட்களில் தாகூரின் இந்தச் சிறுகதை ஆங்கில இலக்கியப் பாடமாக இருந்தது. இது காபூலிலிருந்து கொல்கத்தாவிற்கு

கவிதைகள்
வ. அதியமான்

  புலரிக் கனா உள்ளே அனுப்பிவைத்த நுனிக் கயிற்று வாளியின் வாய் தளும்பத் தளும்ப நீர் நிறைத்து அனுப்பித் தருகிறது தோட்டத்துக் கேணி   என் நுனிவாழை விருந்திலையில் எவரெவரோ வெந்துருகிச் சுடச் சுடப் பருக்கைகளாய்க் கனிகிறார்கள் &nbs

கட்டுரை
எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி

சொர்க்க பூமி பொதுவுடைமைச் சித்தாந்தத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான எங்கல்ஸ் பிரான்ஸ் நாட்டுப் பொருளாதாரம், வரலாறு, தத்துவம் முதலியவற்றை தான் எந்த ஆய்வு நூல்களிலிருந்தும் கற்றுக் கொள்ளவில்லை என்றும், அவற்றை பல்ஸாக் என்னும் புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளரின் நாவல்களிலிருந்து கற்றுத் தெரிந்துக

கட்டுரை
சாந்தன்

குர்னா என்றதும் எச்சரிக்கையாய் முதலில் ஒரு சொல்: இது அப்துல் ரஸாக் குர்ணா பற்றிய ஆய்வுக் கட்டுரையோ, தரவிறக்கிய தகவல் திரட்டோ அன்று. மிகவும் தன்வய நோக்கிலான ஒரு கட்டுரை; கட்டுரை எனக் கொண்டால். ஏதோ ஜிபிஎஸ் தேடி எனக்குக் குர்ணாவைக் காட்டிவிடவில்லை. அவரை நான் எதிர்பாராமல் கண்டடைந்தேன் என்றோ, அ

கவிதைகள்
கோகுலக்கண்ணன்

திணறுவது அந்தச் சிறு குன்றின் உச்சியில் நான் மட்டும் நின்றேன் சூரிய அஸ்தமனப் பொழுதில் ஒரு ஆட்டுக்குட்டிக் கூட இல்லை எனக்கும் சூரியனுக்கும் இடையில் நேர்கோடாய்ச் சரிந்த சூரியன் என் தொண்டைக்குள் சிக்கிக்கொண்டது   உன் அன்புக்குப் பதில் சொல்ல முடியாது திணறுவது அன

திரை
ச. முத்துவேல்

ஹரிச்சந்தராவும் மகரிஷியும்   ராஜா ஹரிச்சந்திரா (1932) 1931இல் வெளியான முதல் தென்னிந்தியத் திரைப்படமான ‘காளிதாஸ்’ பன்மொழிகளும் பேசிய படம்.  தமிழுக்கும் தெலுங்குக்கும் இதுவே முதல் பேசும் படம். தமிழில் வந்த இரண்டாவது படம் என்றாலும், முதன்முதலில்  நூறு விழுக்காடு

திரை
வீரா

செந்நாய் காட்சியில் தெளிதல் சாதியத்தின் துயரங்கள் பெண்களின் மீது குவிவதை மையப்பொருளாக்கியிருக்கிறது இந்தத் திரைப்படம். ஆற்காடு மாவட்டக் கிராமம் ஒன்றில் மயானப்பணிகளைச் செய்துவரும் விளிம்புநிலைக் குடும்பத்தின் கணவன் மனைவி இருவருக்கும் நடக்கும் சாதிய ரீதியான அழுத்தங்களுக்கு அந்தப் பெண்ணின் வா

கவிதைகள்
தக்ஷிலா ஸ்வர்ணமாலி, தமிழில்: எம். ரிஷான் ஷெரீப்

கவிதைகள்       இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளரும் கவிஞருமான தக்ஷிலா ஸ்வர்ணமாலி சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். பாடசாலை ஆசிரியராகப் பணிபுரிந்துவரும் இவர் இதுவரை சிங்களமொழியில் கவிதைத் தொகுப்புகள், சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள், ஆய்வுநூல்கள் என இருபதுக்கும் மேற்பட்ட

அஞ்சலி: காயல்பட்டினம் கே.எஸ். முகம்மது ஷுஐப்
களந்தை பீர்முகம்மது

வாசகர் எப்போதும் வாசகர் மட்டும் அல்லர் மதிப்பிற்குரிய மனிதரொருவரின் மரணச் செய்தி கிடைக்கிறது. அந்த மனிதரின் ஊருக்கும் என் ஊருக்குமான தூரம் இருபது கிலோமீட்டர்கள் அளவில்தான் இருக்கும். நான் பதறிப்போன நிலையில் இறுதியாக அவரின் முகம்பார்க்க விரும்புகிறேன். ஆனால் அவரை அடக்கம்செய்தும் இரண்டுமணிநேரம்

சிறப்புப் பகுதி
கே.என். செந்தில்

கரையாத உருவங்கள் இரண்டு உலகங்கள் (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்) வண்ணநிலவன் பக். 272 ரூ. 325 நாச்சியார்புரம், தெற்குத் தெரு 13ஆம் நம்பர் வீட்டைத் தேடிக்கொண்டு எமதருமன் வருகிறான். வேறு எதற்குமில்லை. அவனது அன்றாட நடைமுறைகளில் ஒன்றை ஈடேற்றிக்கொள்ள. ஆமாம். படுக்கையில் சாகக் கிடக்கும் பர

கவிதைகள்
பாதசாரி

இல்லாமல் இருப்பது காட்சிக்கும் கண்ணுக்கும் இடையில் நான் இல்லை   கருத்துக்கும் மனதுக்கும் இடையில் நான் இல்லை   உயிருக்கும் உடலுக்கும் இடையில் நான் இல்லை   நானுக்கும் எனக்கும் இடையில் நான் இல்லை இல்லை என்பதும்கூட இல்லை   &nb

புத்தகப் பகுதி
பெருமாள்முருகன்

  இலை கொண்டு மரம் வரைதல் ரீசால்வ் (நாவல்) பெருமாள்முருகன் பக். 400 ரூ. 599 ‘கங்கணம்’ நாவலை 2007ஆம் ஆண்டு எழுதினேன். ‘ஏறுவெயில்’, ‘நிழல்முற்றம்’, ‘கூளமாதாரி’ ஆகியவற்றுக்குப் பின்னர் எழுதிய நான்காவது நாவல் இது. எழுதிய காலத்த

காலச்சுவடு பதிப்பகம் 25 ஆண்டுகள் (1996-2021)

ஓவியம்: ரோஹிணி மணி 25 (1996-2021) ஆண்டுகள் இது காலச்சுவடு பதிப்பகத்தின் 25ஆம் ஆண்டு. 1996இல் தொடங்கிய பதிப்பகம் காலத்தின் ஊடேயும் காலத்துடன் உறவாடியும் முன் நகர்ந்தும்  தமிழில் முன்னணிப் பதிப்பகமாக இன்று விளங்குகிறது. வெள்ளி விழாத் தருணத்தில் காலச்சுவடு பதிப்பகம் இன்னொரு சாதனைக்

கவிதைகள்
சித்தாந்தன்

பிறைநிலாவின் புகைப்படக்கருவி அவளது புகைப்படக்கருவி ஒரு பேரலையைப் போலவேயிருக்கின்றது. பெருமழையின் சிறுதுளிகளைப் பெரும் விருட்சங்களைப் போலாக்கிவிடுகின்றாள். உதிரிலைகள் அவளிடத்தில் மலைகளாகிவிடுகின்றன. அவளது புகைப்படக் கருவியில் சிக்கிய முகங்களில் ஏதாவதொன்றிலாவது தாள்கள் ப

கதை
பொன்முகலி

கனா      இறந்தவர்கள் ஏன் கனவில் வருகிறார்கள்? முதலில் கனா என்பது என்ன? அது எங்கிருந்து வருகிறது? உறங்கும்போது நாம் உண்மையில் என்னவாகிறோம்? நாமறியாது நம்முடைய ஆன்மா ஒரு பட்டாம்பூச்சி போல் நம் உடலிலிருந்து பறந்து வெளியில் உலவிவிட்டு வருவதைத்தான் நாம் கனவு என்கிறோமா? கனவுகளா

மதிப்புரை
சுப்பிரமணி இரமேஷ்

கள்ளினும் இனிது காமம் மாலை மலரும் நோய் (கட்டுரைகள்) இசை காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி. சாலை நாகர்கோவில் -1 பக். 136 ரூ. 160 வள்ளுவர் செய்த நூலுக்கு, ‘பரித்தவுரை எல்லாம் பரிமே லழகன் / தெரித்தவுரை யாமோ தெளி’ என்று புகழப்பெறும் பரிமேலழகரின் உரைக்கு முன்பே

மதிப்புரை
தொ. பத்தினாதன்

தகவல்களும் உண்மைகளும் அகதியின் துயரம் (கட்டுரைகள்) வி. சூர்யநாராயண் தமிழில்: பெர்னாட் சந்திரா காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி. சாலை நாகர்கோவில் -1 பக்.  136 ரூ. 160 வன்முறையால் வெளிநாட்டில் தஞ்சம் கோரும் ஓர் அகதி ஜனநாயகத்தின் தொடர்பிலிருந்து துண்டிக்கப்படுகிறா

உள்ளடக்கம்