சொர்க்க பூமி
சொர்க்க பூமி
பொதுவுடைமைச் சித்தாந்தத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான எங்கல்ஸ் பிரான்ஸ் நாட்டுப் பொருளாதாரம், வரலாறு, தத்துவம் முதலியவற்றை தான் எந்த ஆய்வு நூல்களிலிருந்தும் கற்றுக் கொள்ளவில்லை என்றும், அவற்றை பல்ஸாக் என்னும் புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளரின் நாவல்களிலிருந்து கற்றுத் தெரிந்துகொண்டதாகவும் குறிப்பிடுகிறார். அதேபோல் கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், இந்த ஆண்டு நோபல் பரிசுபெறும் அப்துல்ரசாக் குர்னாவின் நாவல்களைப் படிக்க வேண்டும் என்று சொல்வதில் தவறில்லை. அவற்றில் அந்நாட்டின் பண்பாட்டுப் பரிமாணங்கள், எதிர்கொண்ட-