கரையாத உருவங்கள்
கரையாத உருவங்கள்
இரண்டு உலகங்கள்
(தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)
வண்ணநிலவன்
பக். 272
ரூ. 325
நாச்சியார்புரம், தெற்குத் தெரு 13ஆம் நம்பர் வீட்டைத் தேடிக்கொண்டு எமதருமன் வருகிறான். வேறு எதற்குமில்லை. அவனது அன்றாட நடைமுறைகளில் ஒன்றை ஈடேற்றிக்கொள்ள. ஆமாம். படுக்கையில் சாகக் கிடக்கும் பரிபூர்ணத்தாச்சிக்கு இவ்வுலகோடு உள்ள தொடர்பைக் கடைசியாகத் துண்டித்துத் தன்னோடு உடனழைத்துச்செல்வது அவனது திட்டம். நாடகபாணி உடையில் நின்றபோதும் தெருவில் முகவரியைத் துழாவுகையில் சிறார்கள