“என் காலத்தின் குழந்தை நான் ”
Courtesy: Femmagazine.com
கனகராஜ் பாலசுப்பிரமணியம்:
நேர்காணலை எங்களுக்கு வழங்குவதற்காக மிகவும் நன்றி. ஆயிரக்கணக்கான இந்திய வாசகர்கள் தென் அமெரிக்க இலக்கியத்தில் பேரார்வம் கொண்டவர்கள்; பல்வேறு இந்திய இதழ்கள் தென் அமெரிக்க இலக்கியம் குறித்த பல சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளன. உங்கள் சிறுகதைகள் சில ஓரிரு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. உங்கள் கதை ஒன்றை நானும் மொழி பெயர்த்திருக்கிறேன். ஆகவே உங்கள் பெயர் இந்திய வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானது. உங்கள் புனைகதை பற்றிய இந்திய வாசிப்புகள்/விளக்கங்கள் பலவும் பெண்ணிய அணுகுமுறையைக் கொண்டவை. அதுமட்டுமல்லாமல், பெண் எழுத்து (un lenguaje hembrico) என ஒன்று உள்ளது என்னும் கருத்தை நீங்கள் உறுதிப்படுத்துகிறீர்கள். உங்கள் முதல் தொகுப்பிலிருந்தே பெண்ணுடைய ஆசையின் சிறப்பம்சத்தை கதாப