முடிவில்லாப் பயணத்தின் தொடக்கம்
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எப்படி செயல்படுகிறது என்ற விவரத்தை மிகவும் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். இயற்பியலின் மிகச் சில கோட்பாடுகளை அறிந்துகொண்டால் போதும். அவையும் மிக எளிதாகப் புரிந்துகொள்ளக் கூடியவை.
சில அடிப்படைத் தகவல்கள்
நாம் எப்படி பார்க்கிறோம்? ஒளி இருப்பதால் பார்க்கிறோம். கனத்த கறுப்புத் திரையிடப்பட்ட இருட்டறையில் நமக்கு ஒன்றும் தெரியாது. ஒளித்துகள்கள் நாம் பார்க்கும் பொருளிலிருந்து புறப்பட்டு நம் கண்களைச் சேர்ந்தடைவதனால் நமக்கு அப்பொருள் தெரிகிறது. ஒவ்வொரு பொருளும் மொத்தையாக ஒரே மாதிரி நமக்குத் தெரிவதில்லை. துல்லியமாக வேறுபாடுகள், பரிமாணங்கள், வண்ண வித்தியாசங்கள் தெரிகின்றன. அதற்குக் காரணம் அதிலிருந்து புறப்பட்டு நம்மை அடையும் ஒளித்துகள்களின் ஆற்றலும் அவற்றின் அலைநீளங்களும் வெவ்வேறாக இருப்பதுதான். அவை நம் மூளையால் பகுத்தாராயப்பட்டு அதன் தோற