தமிழ் வேதப் பொஸ்தகமும் இரண்டு ஐரோப்பிய ஐயர்களும்
தமிழருக்குச் சம்பந்தமில்லாத அந்நிய நூலையொட்டி இரு அயல்நாட்டு ஐயர்கள் 18ஆம் நூற்றாண்டில் தென் இந்தியாவில் நடத்திய இறையியல் சண்டைபற்றிய நிகழ்வுக் கணக்கு இது. வாதத்தைத் தூண்டிய புத்தகம் நான்கு சுவிசேஷங்களையும் அப்போஸ்தலர் நடபடிகளையும் கொண்ட ‘ஐந்து வேதப் பொஸ்தகம்’ என்ற தலைப்பில் வெளிவந்த கிறிஸ்தவத் தமிழ் வேதம்; ஐந்நூறு படிகள் அச்சிடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. சண்டை போட்டவர்கள் ஜெர்மன் நாட்டுக்காரரான கிறிஸ்தவச் சீர்திருத்த லூதரன் சபையைச் சேர்ந்த பத்தோலேமியஸ் சீகன்பால்க் (1682-1719). அடுத்தவர் இத்தாலியிலிருந்து வந்த கொன்ஸ்டன்டைன் பெஸ்கி(1680 – 1747); பின்னால் வீரமாமுனிவர் என்று பெயர் மாற்றிக்கொண்டவர். இந்தக் கண்டனப் போர் நாவலரும் வள்ளலாரும் ‘அருட்பா மருட்பா’ பற்றிச் சைவத் தொடர்பில்லாத ஆங்கிலேயரிடையே இங்கிலாந்தில் துண்டறிக்கைப் போர் நிகழ்த்தியதைப் போன்றது. தமிழ் மக்களுக்கா