தா. இராமலிங்கத்தின் கவிதைகள் உடலும் உடல் கடத்தலும்
An ‘Image’ is that which presents an intellectual and emotional complex in an instant of time.
- Ezra Pound
ஆன்மாவாகிறது உடல் முழுமையாய்…
- ரூமி
ஈழத்தின் கவிதை வரலாறு இன்னும் சரியாக எழுதப்படவில்லை. கவிஞர்களின் காலரீதியான வரிசைகளும் உதிரியாக எழுதப்பட்ட கவிஞர்கள் தொடர்பான குறிப்பிடத்தக்க எழுத்துக்களும் எம்மிடையே உள்ளனவாயினும் ஈழக்கவிதையின் தொடரோட்டம், போக்குகள், பாணிகள் - பாணிமாற்றங்கள், விடயப்பரப்புகள் - அவற்றின் மீதான செல்வாக்குப் பரப்புகள், இவற்றை நிகழ்த்தி முடித்த சமூகவரலாற்றுப் பின்புலங்கள், பொதுத் தமிழ்க் கவிதைப் பரப்பினுள் ஈழத்தமிழ்க் கவிதைகளின் தனியடையாளம் என்பவற்றை ஒட்டிய ஆய்வுகளை இன்னும் நாங்கள் அதன் சரியான அர்த்தத்திற் செய்யவில்லை. குறிப்பிட்ட சில விலகலான உதாரணங்கள் ப