எப்பிறப்பில் காண்போம் இனி?
தவத்திரு ஊரன் அடிகளார் உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியறிந்து சற்றுக் கவலையுடன் இருந்தேன். அன்று இரவு 1.30 மணிக்கு அலைபேசித் திரையில் வந்த அழைப்பில் முன்னர் பதிவு செய்திருந்த அவரின் முகம் தெரிய, இந்த நள்ளிரவில் அடிகளாரிடமிருந்து அழைப்பு வர வேண்டிய அவசியம் இல்லையே என, விஷயத்தை ஒருவாறு ஊகித்துக்கொண்டே நடுங்கிய கைகளோடு தொலைபேசியை எடுத்தேன். என் ஊகம் மெய்யாயிற்று; ‘அடிகளார் மறைந்தார்’ என்னும் துயரச் செய்தியை எதிர்முனைக் குரல் அறிவித்தது.
குப்புசாமி (22.05.1933) என்னும் பூர்வாசிரமப் பெயர் பெற்ற தவத்திரு ஊரன் அடிகளார் ஜூலை மாதம் 13ஆம் தேதி குருபூர்ணிமை அன்று சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் 11.30 மணியளவில் காலமானார். எனக்குத் தெரிந்து மருத்துவமனைப் பக்கமே போகாதவர்; தன் உள்ளுணர்வுக்குச் செவிசாய்த்து, அவரே மாடிப் படியேறிச் சென்று பணமெடுத்துக்கொண்டு, சாதாரணக் காய்ச்சலுக்காக மரு