நவீன நாடகவியலின் பிதாமகன்
97 வயதில் இறந்த ஒரு நாடகாசிரியரைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் அவர் இருபது வயதிலிருந்தே நாடகத் துறையில் இருந்தவர். பிறப்பினால் ரஷ்யன்; லித்துவேனியாவில்தான் அவரின் முன்னோர்கள் இருந்தார்கள். யூத இனத்தைச் சேர்ந்தவர். அவருடைய தாத்தாவின் காலத்தில் இங்கிலாந்தில் குடியேறிவிட்டதால் பீட்டர் ப்ரூக் என்கிற ஆங்கிலப் பெயரை அவருக்குச் சூட்டினார்கள். அவர் தொடாத துறையே கிடையாதென்று சொல்லலாம். ஊர் சுற்றுவது அவருக்கு நிரம்பப் பிடித்தமானது. புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்காக உலகம் முழுதும் அலைந்துகொண்டே இருந்தவர். இருபது வயதிலேயே ஷேக்ஸ்பியர் நாடகங்களை இயக்க ஆரம்பித்துவிட்டார்.
தான் இயக்கும் நாடகங்களின் வடிவத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டிருப்பார். புது விதமான பரிசோதனைக