எனது நண்பன்
நம் வாழ்வைச் செறிவாக்குபவர்கள் நண்பர்கள் என்ற வரையறையில் பார்த்தால் அச்சுதன் எனக்கு நல்ல நண்பராயிருந்தார். சென்னையிலிருந்து நாங்கள் பெங்களூருக்கு 2010இல் குடிபெயரும் சமயம் திருவான்மியூரில் எங்கள் வீட்டிற்கு வந்தவர் அடுக்கிவைக்கப்பட்டிருந்த பெட்டிகளைப் பார்த்து ஒரு நொடி நின்றார்; இதை நான் பார்க்க விரும்பவில்லை என்று திரும்பிப் போய்விட்டார். பின்னர் நான் சென்னைக்குச் செல்லும் ஒவ்வொருமுறையும் அவருடன் ஒரு மாலையைச் செலவிடுவேன். இனிமேல் இவரைப் பார்க்க முடியாது என்ற உண்மை சாவின் கூர்மையை உணர்த்துகின்றது.
எழுபதுகளில் தமிழ்நாட்டில் சிறு பத்திரிகைகளும் இலக்கியக் குழுக்களும் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்த காலம். கசடதபற இதழைச் சுற்றி ‘க்ரியா’ ராமகிருஷ்ணன், ஞானக்கூத்தன், முத்துசாமி போன்றோர் இயங்கிக்கொண்டிருந்தனர். இவர்களுடன்தான் நான் அச்சுதனைச் சந்தித்தேன். அப்போது அவர் மெட்ராஸ் ஆர்ட்ஸ் கிளப் என்று அறியப்பட்ட சென்