கருத்துரிமை விருது
ஒடிய மொழியின் நவீன இலக்கியத் தந்தையாகிய ஃபகீர் மோகன் சேனாபதி அவர்களின் பெயரால் அமைந்த இந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தர், மேதகு கணேசி லால் அவர்களே, ஒடிய மொழி மற்றும் இலக்கியத் துறை அமைச்சர் மாண்புமிகு அஸ்வினிகுமார் பாத்ரா அவர்களே, மக்களவை உறுப்பினர் திரு.பிரதாப் சந்ர சாரங்கி அவர்களே, இப்பல்கலைக்கழகம் அமைவதில் பங்காற்றிய இந்த மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியரும் ஓய்வுபெற்ற அதிகாரியும் எழுத்தாளருமாகிய திரு.சஞ்சீப்குமார் ஹோதா அவர்களே, மதிப்பிற்குரிய துணைவேந்தர் சந்தோஷ்குமார் திரிபாதி அவர்களே, பேராசிரியர்களே, பல்கலைக்கழகப் பணியாளர்களே, இலக்கிய ஆர்வலர்களே, அன்பிற்குரிய மாணவர்களே! அனைவருக்கும் வணக்கம்.
இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் நான். அங்கிருந்து வெகுதொலைவில் இருக்கும் கிழக்கு மாநிலமான ஒடிசாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று எனக்கு மதிப்புமிக்க விருதை வழங்கியிருப்பத