ஃபார்ம் என்னும் புதிர் அற்ப சுகங்களும் முக்தி நிலையும்
விராட் கோலியின் தொடர் சரிவை எப்படி வர்ணிப்பது? கையறு நிலை. காவியச் சோகம். துறவறத்தை நோக்கி நகரும் கம்பீரம் அல்லது எல்லாரும் சொல்வதுபோல ஃபார்ம் அவுட்?
இந்தக் கொடுந்துயருக்கு உண்மையில் என்னதான் பெயர் சூட்டுவது? விக்கெட்டை இழந்து நடையைக் கட்டும் மட்டையாளனைப் பட்டத்தைப் பறிகொடுத்த மன்னனுடன் ஒப்பிடுகிறார் மைக் பிரயர்லி. தன் இயலாமையைப் புன்னகையுடன் கடக்கும் கோலியின் மனத்தில் உள்ளபடி என்னதான் ஓடிக்கொண்டிருக்கும்? சதா சர்வகாலமும் தன்னை வட்டமிடும் கண்களை நோக்கி ‘என் விதியைப் பார்த்தாயா’ என நியாயம் கேட்கிறாரா? இல்லை, தான் கட்டிய ‘எதிர்பார்ப்பு’களின் அரண்மனையில் தானே சிறைப்படும் அவலத்தை எண்ணி அஞ்சுகிறாரா? இல்லை, நூறு என்ற அந்த மாய எண்ணைக் கடக்கும்போது மட்டும்தான் தான் விராட் கோலியா என்று தத்துவ விசாரம் செய்துகொள்கிறாரா?
விக்கெட்டைப் பறிகொடுத்த வீ