சன்ஷைன்
ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி
சன்ஷைன், நான் உனக்கு எழுதுவேன் என்று நினைத்திருக்கவேயில்லை. கடிதங்கள் வீணானவை என்று நீ சொல்வாய். இதைக் கடிதம் என்று நான் கூறமாட்டேன். ‘சன்ஷைனுடன் ஒரு நேருக்கு நேர்’ என்றுதான் இதைக் கூறுவேன். நாங்கள் அப்படித்தானே உரையாடுவோம். இல்லை; உரையாடினோம். ஆங்கில மொழிக்குப் புதியதொரு அர்த்தத்தை நீ வழங்கினாய். எதை நீ கூற வேண்டியிருந்தாலும், அதை எப்படி கூறுவது, எவ்வாறு கூறுவது என்றெல்லாம் எப்போதும் நீ அறிந்திருந்தாய். நீயில்லாமல் எனது நா எழவேயில்லை. என்னால் உனது கருமையான, மென்மையான சருமத்தைத் தொட்டுணர முடியவில்லை. பேனாவும் காகிதமும்தான் உன்னை அடைய ஒரே வழி. உன்னுடன் எனக்குப் பேசக்கூடிய ஒரே வழி அதுதான். உணர்ச்சிகள், ஆழமான உணர்ச்சிகள் என்று சொற்களுக்குப் பலவித அர்த்தங்களிருக்கின்றன. பக்கங்கள் வெறுமனே பக்கங்கள