ஈழத்தமிழுக்கு அணி சேர்த்த பெருமகன்
தமிழ் இலக்கிய, பண்பாட்டுப் பரப்பில் நீண்டகாலமாகச் செயலாற்றிவரும் ஆளுமைகளில் 80 வயதைக் கடந்தவர்களின் பங்களிப்பை நினைவுகூரும் விதமாகக் காலச்சுவடு வெளியிடும் தொடரின் மூன்றாவது கட்டுரை இது. சென்ற இதழில் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் பற்றி மு. இராமனாதன் எழுதிய கட்டுரை இடம்பெற்றிருந்தது. இந்த இதழில் பத்மநாப ஐயர் பற்றி
மு. நித்தியானந்தன் எழுதுகிறார்.
– பொறுப்பாசிரியர்
கனடா இலக்கியத் தோட்டம் இ. பத்மநாப ஐயருக்கு 2005இல் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கெளரவித்திருக்கிறது. லண்டனில் ஆலயங்கள், பழைய மாணவர் சங்கங்கள், சமூக அமைப்புகள் போன்றன அவருக்கு ‘பதிப்புச் செம்மல்’, ‘சமூக