பியானோ
ஓவியம் : மணிவண்ணன்
“பரிதி வீடியோ அனுப்பியிருக்கான் பாத்தியா சரஸ்வதி?” காலை நடைப்பயிற்சி முடித்த களைப்போடு சோபாவில் அமர்ந்த முத்துசாமி தன் மனைவியிடம் கேட்டார்.
“இன்னுமில்லைங்க” சமையலறையிலிருந்து ஆர்வமேயில்லாமல் சரஸ்வதி சொன்னாள்.
“ஜில்லுக் குட்டி உன் போனுக்காகக் காத்திருப்பா. பாத்திட்டுப் பேசிருமா” துண்டால் முகத்தைத் துடைத்தபடிச் சொன்னார்.
அவள் எதுவும் பேசாமல் காபி நிரம்பிய கோப்பை களோடு வந்தாள். ஒன்றை முத்துசாமியிடம் கொடுத்தவள் மற்றொன்றைத் தான் எடுத்துக் கொண்டு எதிரே இருந்த சோபாவில் அமர்ந்து குடிக்கலானாள்.
“உனக்குப் புடிக்குதோ புடிக்கலையோ. அவுங்களுக்குப் புடிச்சிருக்கு. அத ஏத்துக்கிட்டுப் பாராட்டுறதுதான் நம்மள மாதிரி வயசானவங் களுக்கு அழகு. இப்படிப் பிடிவாதம் பண்றது தப்புமா” என்றார்.
<p