இலங்கை அரசியல் மாற்றம் ஏமாற்றம்
நாடாளுமன்றத் தேர்தலில் படுமோசமாகத் தோல்வியுற்ற ரணில் விக்கிரமசிங்க பிரதமராகி, இரண்டு மாதங்களிலேயே ஜனாதிபதியாகவும் வெற்றியடைந்திருக்கிறார். ஜனாதிபதித் தேர்தலில் உச்ச வெற்றியை (52.25% வாக்குகளை)ப் பெற்ற கோத்தபய ராஜபக்ஷவும் அவருடைய அணியினரும் ஆட்சிக்காலம் முடிவதற்கு முன்பே அதிகாரத்தை இழந்திருக்கிறார்கள். இலங்கை அரசியலில் இது ஆச்சரியமான நிகழ்வு மட்டுமல்ல, பல தலைகீழ் மாற்றங்களுக்கான நிகழ்வுமாகும். அவை நடந்திருக்கின்றன; நடந்துகொண்டிருக்கின்றன; நடக்கவும் போகின்றன. அதனையே நிலைமைகள் காட்டுகின்றன. பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கை மேலும் சீரழிவையும் சிதைவையும் சந்திக்கப்போகிறது. புதிய ஜனாதிபதி, புதிய அமைச்சரவை என மாறுதல்கள் ஏற்பட்டாலும் சிந்தனையிலும் நடைமுறைகளிலும் மாற்றங்கள் தென்படவில்லை.
இதற்கான காரணங்கள் என்ன?
1. ராஜபக்ஷவினரின் ஆட்சித்தவறுகளும