அயோத்திதாசர குறிப்பிடும் பின்கலை நிகண்டு
(சூடாமணி நிகண்டு)
தமிழ் நிகண்டுகளில் மண்டலபுருடர் இயற்றிய ‘சூடாமணி நிகண்டு’ மக்கள் வழக்கில் மிகுதியான செல்வாக்குப் பெற்று விளங்கியது. சொற்பொருள் கூறும் நூலை ‘உரிச்சொல்’ என்று வழங்கிவந்த தமிழ் மரபிற்கு நிகண்டு என்ற சொல்லினை முதன்முதலில் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தது சூடாமணி. அதன் தோற்றத்திற்குப் பிறகு முன்பிருந்த நிகண்டுகளான திவாகரம் (கி.பி.9), பிங்கலம் (கி.பி.10) நூல்களின் பயிற்சி மக்களிடம் குறைந்துவிட்டது. நூற்பா யாப்பில் இயற்றப்பெற்ற திவாகரம், பிங்கலம் போல் அல்லாமல் சூடாமணி விருத்தப்பாவால் அமைந்ததே அதன் காரணமாகும். இதுவரை வெளிவந்துள்ள அதன் பதிப்புகளிலும் வழக்குகளிலும் சூடாமணி நிகண்டு, நிகண்டு சூடாமணி, சூடாமணி என்றே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது