இலக்கியவாதியின் மொழியியல் பயணம்
80+ தமிழ் இலக்கிய, பண்பாட்டுப் பரப்பில் நீண்டகாலமாகச் செயலாற்றிவரும் ஆளுமைகளில் 80 வயதைக் கடந்தவர் களின் பங்களிப்பை நினைவுகூரும் விதமாகக் காலச்சுவடு வெளியிடும் தொடரின் ஆறாவது கட்டுரை இது. டிசம்பர் இதழில் வே. வசந்திதேவி பற்றி கா.அ. மணிக்குமார் எழுதிய கட்டுரை இடம்பெற்றிருந்தது. இந்த இதழில் சு. இராசாராம் பற்றி இரா. அறவேந்தன் எழுதுகிறார்.
– பொறுப்பாசிரியர்
‘சென்ற மாதம் சாகித்திய அகாதமி தமிழ் விருதாளர் பெயரை அறிவித்தது. அந்தப் பெயரைத் தெரிவு செய்வதற்கு முன்பு இறுதிப் பட்டியல் ஒன்றை அந்த நிறுவனம் தயாரித்திருந்தது. அந்தப் பட்டியலில் இருந்த சில நூல்களின் பெயர்களுள் ஒன்று ‘நோம் சோம்ஸ்கி’. இந்த நூலை எழுதியவர் எஸ். இராசாராம் என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடப் பெற்றிருந்தது. இந்தப் பட்டியலைப் பார்த்ததும் எனக்குள் அளவற்ற மகிழ்ச்சி உ