பாட்டுவெயில்
ஓவியம்: மணிவண்ணன்
விஜய் வேலையில் மும்முரமாக இருக்கிறார். விஜய்யின் உண்மையான பெயர் தெரியாது. கடையின் பெயர் ‘விஜய் சலூன்’. ஆகவே, ஊரவர்களுக்கு அவர் விஜய்.
இப்போது வெட்டிக்கொண்டிருக்கிறவருக்கு வேலை முடிய இன்னும் ஐந்து நிமிஷமாவது ஆகும். அதன் பிறகு இன்னொருவர், உள்ளே நாளிதழ் படித்தபடி காத்திருக்கிறார். என் வேலை முடிந்து ஐந்துமணிக்கு வீட்டிற்குப் போனாலும் போதும். அதற்கு முதல் போய்த்தான் என்ன செய்வது? இன்றைக்கு ஆறுமணிக்கு மின்வெட்டு. ஏழரைக்குத் திரும்பும் என்று சொன்னாலும், அது வர எட்டு மணியாகும். இப்போ போய், தோய்ந்து, உடுப்பெல்லாம் அலம்பிவிட்டு இருக்கத்தான் சரி. எட்டின் பிறகுதான் எழுதப் படிக்கவோ, ஏதேனும் வேலை செய்யவோ முடியும்.
என்னதான் கூரை மின்விசிறி அளவாகச் சுழன்றுகொண்டிருந்தாலும், ஒரே ஒரு கதவு மட்டுமுள்ள அந்